சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி முந்தைய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது. வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி வெற்றியை தொடரும் முனைப்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 9 போட்டிகளிலும், ஐதராபாத் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஐபிஎல் தொடரில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்விகள், மோசமான ஓபனிங், நிலையில்லாத மத்திய வரிசை உள்ளிட்ட சில சிக்கல்களால் சிதைந்துள்ளது சென்னை அணி. பேட்டிங்கில் டூ பிளசியும், பந்து வீச்சில் சாம்கரண் மற்றும் தீபக் சாஹர் மட்டுமே ஆறுதல் அளித்து வருகின்றனர். தொடக்க வீரர்கள் வாட்சன், விஜய், கெய்க்வாட், கெதார் ஜாதவ், கேப்டன் தோனி ஆகியோர் ரன்களைச் சேர்க்க திணறுவது அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, ஜடேஜா ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருவது கூடுதல் ரணம். சாம் கரண், ஹேசல் வுட் இருவரும் பந்து வீச்சில் நம்பிக்கையளிக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் காயத்திலிருந்து மீண்டுள்ள ராயுடு, பிராவோ இருவரும் களமிறக்கப்பட்டு, ஓபனிங் ஜோடியும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐதராபாத் அணியைப் பொறுத்தவரையில் முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்று, மூன்றாவது போட்டியில் வெற்றி முகத்திற்கு திரும்பியுள்ளது. கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன் பேட்டிங்கில் பலமாக உள்ளனர். பந்து வீச்சில் புவ்னேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் தூணாக வலம் வருகின்றனர்.

இறுதி ஓவர்களில் துல்லியமான யார்க்கர்களை வீசும் நடராஜன் ஐதராபாத் அணிக்கு பெரும் பலமாக உருவெடுத்துள்ளார். இளம் வீரர்கள் கலீல் அகமது, அபிஷேக் சர்மா ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பலவீனம். இறுதி ஓவர்களில் அதிரடி காட்ட, நிலையான ஹிட்டர் இல்லாததும் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com