விளையாட்டு
இந்த சாதனையை படைக்க தோனிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் தான் தேவை
இந்த சாதனையை படைக்க தோனிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் தான் தேவை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் ஒவ்வொரு நாளுமே சாதனை மேல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியுடனான கடந்த போட்டியில் கூட சென்னை அணியின் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்திருந்தார் தோனி.
அதே போல இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியிலும் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்து சாதனை படைக்கலாம்.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் ஷர்மாவும், சுரேஷ் ரெய்னாவும் உள்ளனர். இருவருமே 300 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக தோனி 295 சிக்ஸர்களை டி20 ஆட்டங்களில் மட்டும் அடித்துள்ளார்.
ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் தோனி 5 சிக்ஸர்களை அடித்தால் அந்த பட்டியலில் இணைவார்.