‘சின்னத் தல அதிரடி’ சென்னை ரசிகர்கள் உற்சாகம் : இலக்கை நோக்கி ராஜஸ்தான்

‘சின்னத் தல அதிரடி’ சென்னை ரசிகர்கள் உற்சாகம் : இலக்கை நோக்கி ராஜஸ்தான்
‘சின்னத் தல அதிரடி’ சென்னை ரசிகர்கள் உற்சாகம் : இலக்கை நோக்கி ராஜஸ்தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் இடையேயான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டம் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சீரான ரன்களை சேர்த்து வந்த சென்னை அணியில் நம்பிக்கை நாயகன் அம்பதி ராய்டு 12 ரன்களிலேயே வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ‘சின்னத்தல’ ரெய்னா அதிரடி காட்ட அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தது. அவருடன் கைகோர்த்த வாட்சன் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ரெய்னா 52 (35), வாட்சன் 39 (31), தோனி 33 (23), பில்லிங்ஸ் 27 (22) ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ஜெர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தற்போது 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் பட்லர் 38 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், முதல் விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தினார். அதில் 11 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அதைத்தொடர்ந்து 4 ரன்களில் ரஹானேவை சாய்த்து இரண்வாது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com