வெளுத்து வாங்கிய வாட்சன், தோனி !

வெளுத்து வாங்கிய வாட்சன், தோனி !
வெளுத்து வாங்கிய வாட்சன், தோனி !

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்துள்ளது.


30-வது ஐபிஎல் லீக் ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியுள்ளது. டாஸ் ஜெயித்த டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டூ பிளஸ்சிஸ் களமிறங்கினர்.
 தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய வாட்சன், டெல்லி அணியின் பந்துவீச்சை தெறிக்க விட்டார்.

மறுமுனையில் டூ பிளஸ்சிஸ் நின்று நிதானமான ஆடினார். 10.5 ஆவது ஓவரில் விஜய் சங்கர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டூ பிளஸ்சிஸ். இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் களம் கண்ட சுரேஷ் ரெய்னா ஒரு ரன் எடுத்த நிலையில் அடுத்த பந்திலே மேக்ஸ்வெல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். 

ஒருபுறம் வெளுத்து வாங்கிய வாட்சனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். சிக்சர், பவுண்டரி என விளாசிக் கொண்டிருந்த வாட்சன் 78 ரன்கள் குவித்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். இதையடுத்து அம்பதி ராயுடு - தோனி கைகோர்த்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த இந்த ஜோடி சிக்சர், பவுண்டரியாக விளாசா சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் அம்பதி ராயுடு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 22 பந்துகளைச் சந்தித்த தோனி 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் மேக்ஸ்வெல், விஜய் சங்கர் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com