2019 சீசனில் டெல்லி பந்துவீச்சை தெறிக்கவிட்ட சென்னை பேட்ஸ்மேன்கள்
துபாயில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த ஆட்டம் சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் இடையிலான ஆட்டம் என கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக பேசி வருகின்றனர். கடந்த 2019 சீசனில் டெல்லியுடன் இரண்டு லீக் ஆட்டம் மற்றும் பிளே ஆப் சுற்று என மூன்று முறை விளையாடி இருந்தது சென்னை.
அந்த மூன்றிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி பந்துவீச்சை சென்னை பேட்ஸ்மேன்கள் தெறிக்கவிட்டது அதற்கு முக்கிய காரணம். வாட்சன், டு பிளேஸிஸ், தோனி என சென்னையின் மும்மூர்த்திகள் அதில் முக்கியமானவர்கள்.
வாட்சன் - 44 ரன்கள் 26 பந்துகள்
2019 சீசனில் டெல்லி பெரோஷா கோல்டா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 148 ரன்களை செஸ் செய்து வெற்றி பெற்றிருக்கும். அந்த ஆட்டத்தில் ஓப்பனர் வாட்சன் மட்டும் 26 பந்துகளில் 44 ரன்களை குவித்திருப்பார். இதில் நான்கு பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
ரெய்னா, ஜாதவ், தோனி மற்றும் வாட்சன் அமைத்து கொடுத்த அடித்தளத்தை பயன்படுத்தி ரன் சேர்த்திருப்பார்கள்.
தோனி- 44 ரன்கள் 22 பந்துகள்
சென்னையில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் முதலாவதாக பேட் செய்த சென்னை அணி 179 ரன்களை விளாசியிருக்கும். பேட்ஸ்மேன்களின் கூட்டு முயற்சியினால் இது சாத்தியம் என்றாலும் அந்த ஸ்கோரை எட்ட தோனியின் அதிரடி பேட்டிங் பெரிதும் உதவியது.
22 பந்துகளில் 44 ரன்களை அடித்திருப்பார் தோனி. நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் தோனியின் இன்னிங்ஸில் அடங்கியிருக்கும். இந்த ஆட்டத்தில் ரெய்னா, டுபிளேஸிஸ் மற்றும் ஜடேஜாவும் சிறப்பாக விளையாடியிருப்பார்கள்.
இதே போல விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் டெல்லி அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடந்த முறை இறுதி போட்டிக்கு சென்றிருந்தது சென்னை.
தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுபிளேஸிஸ் மட்டுமே 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார்கள். கடந்த சீசனை போல இந்த சீசனிலும் சென்னை பேட்ஸ்மேன்கள் டெல்லி பந்துவீச்சை ஒரு கை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.