இது தோனியின் "வாத்தி கம்மிங்"! சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ!
ஆசிரியர் தினமான இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள "வாத்தி கம்மிங்" பாடலை தோனியை இடம்பெற வைத்து வெளியிட்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். அதில் சிஎஸ்கே வீரர்கள் 2 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்கவில்லை. விரைவில் அவர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை நாளை வெளியாக இருக்கிறது. முதல் போட்டி மும்பை - சிஎஸ்கே இடையே நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மிக முக்கியமாக தோனியின் தரிசனத்துக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலை ஆசிரியர் தினமான இன்று தோனியை வைத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
இதில் "வாத்தி கம்மிங்" என தோனி கெத்தாக நடந்து வருவது, பயிற்சி எடுப்பது, சிக்ஸர் அடிப்பது என அதகளப்படுத்தி இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.