ஐபிஎல் ஏலத்தில் முக்கிய இந்திய, வெளிநாட்டு வீரர்கள் யார், யார்? விலை எப்படி? - முழு விபரம்

ஐபிஎல் ஏலத்தில் முக்கிய இந்திய, வெளிநாட்டு வீரர்கள் யார், யார்? விலை எப்படி? - முழு விபரம்
ஐபிஎல் ஏலத்தில் முக்கிய இந்திய, வெளிநாட்டு வீரர்கள் யார், யார்? விலை எப்படி? - முழு விபரம்

ஐபிஎல் 2023 ஏலம் எப்போது? எத்தனை வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? மொத்தப் பட்டியலில் எத்தனை இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்? அனைத்து விவரங்கள் குறித்த சிறு தொகுப்பாக பார்ப்போம்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மினி ஏலத்திற்கான பதிப்பிற்கான வீரர்கள் ஏலப் பட்டியலை இன்று வெளியிட்டது. அதன்படி எத்தனை இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்கள், எத்தனை புதிய இந்திய வீரர்கள் மற்றும் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2023 ஏலம் எப்போது?

கொச்சியில் டிசம்பர் 23-ம் தேதி ஏலம் நடைபெற உள்ளது.

எத்தனை வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?

முன்னதாக, 991 வீரர்கள் பட்டியலில் இருந்து, 10 அணிகள் மூலம் மொத்தம் 369 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், அணிகளின் வேண்டுகோளின் பேரில் 36 கூடுதல் வீரர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தற்போது மொத்தமாய் 405 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் வழங்கப்பட உள்ளனர்.

பட்டியலில் எத்தனை இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்?

405 வீரர்களில், 273 பேர் இந்திய கிரிக்கெட் வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 4 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கேப்டு மற்றும் அன் கேப்டு வீரர்களின் எண்ணிக்கை என்ன?

மொத்தம் 119 கேப் செய்யப்பட்ட வீரர்கள், 282 வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர்.

2023 பதிப்பில் எத்தனை அணிகள் பங்கேற்கும்?

2023 ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும்.

வீரர்கள் தேர்வுக்கு எத்தனை இடங்கள் உள்ளன?

"அதிகபட்சமாக 87 இடங்கள் இப்போது கிடைக்கின்றன, மேலும் 30 வரை வெளிநாட்டு வீரர்களுக்கு இடங்கள் உள்ளன" என்று ஐபிஎல் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அதிக கையிருப்பு விலை என்ன?

2 கோடி ரூபாய் என்பது அதிக கையிருப்பு விலையாகும், இதில் 19 வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்குள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 11 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். 1 கோடி அடிப்படை விலையுடன் 20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் மனிஷ் பாண்டே மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இரு இந்திய வீரர்கள் உள்ளனர்.

முக்கியமான பிளேயராக மாறுவாரா கேன் வில்லியம்சன்!

2023 ஐபிஎல் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு ஸ்டிராங்கான மிடில் ஆர்டரை அணிக்குள் சேர்க்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு நிச்சயம் செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

வேறு எந்த அணிக்கு கேன் வில்லியம்சன் முக்கியம் என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் கவனம் செல்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி இந்திய அணியி ஆலோசனை குழுவில் மெம்பராக செல்லும் பட்சத்தில் அவருக்கு பிறகு யார் அணியை வழிநடுத்துவார் என்ற கோணத்தில் கேன் வில்லியம்சனை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. விஜய் ஹசாரே டிரோபியில் சிறப்பாகவே சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கேப்டன்சி செய்திருந்தாலும் அதற்குள் அவரை கேப்டனாக தேர்வு செய்யும் இடத்திற்க்கு செல்லாது என்றே தோன்றுகிறது.

அதன் படி பார்த்தால் தோனிக்கு பிறகு கேன் வில்லியம்சனை தேர்ந்தெடுக்கும் எண்ணம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேலும் சிஎஸ்கே எப்போதும் நியூசிலாந்து வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லும் என்பதாலும், கேப்டனுக்கான தேவை நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு இருக்கும் என்பதாலும், மேலும் ஐடியாலஜியை பொறுத்தவரையில் கூலாகவும், நிதானமாகவும் தோனியைப்போலவே கேன் வில்லியம்சன் செயல்படுவதால் அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் செல்லும் என்றே தோன்றுகிறது.

நம்பர் 3 இடத்திற்கான வீரரை தேடும் இடத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இருக்கிறது. அந்த வகையில் கேன் வில்லியம்சனிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் வெளியேற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருட ஐபிஎல் ஏலத்தின் முக்கியவீரராக கேன் வில்லியம்சன் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கவனிக்கப்படக்கூடிய வெளிநாட்டு வீரர்கள்?

மற்ற வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை சமீபத்தில் கலக்கிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், லிட்டன் தாஸ், ரீல் ரோஸ்ஸோவ், ஹாரி ப்ரூக், சாம் கரன், கேம்ரன் கிரீன், சிக்கந்தர் ராஷா, அடில் ரசீத், டிரவிஸ் ஹெட். பால் ஸ்டிர்லிங், தசுன் சனகா முதலிய வீரர்கள் கவனம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

கவனிக்கப்படக்கூடிய இந்திய வீரர்கள்?

இந்திய வீரர்களை பொறுத்த வரை பிரியம் கார்க், சவுரப் குமார், கேஎஸ் பரத், அபிமன்யூ ஈஸ்வரன், கேம் ஆசிப், ஹர்னூர் சிங், அங்கிரிஸ் ரகுவன்சி, ராஹ் பவா, யாஸ் துல், விக்கி ஓஸ்ட்வல் முதலிய இளம் வீரர்கள் கவனம் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டொமஸ்டிக் வீரர்களை பொறுத்தவரையில் நாராயன் ஜகதீசன், சமர்த் யாஸ், சன்வீர் சிங் முதலிய வீரர்கள் கவனம் ஈர்ப்பார்கள்.

டிசம்பர் 23 ஆம் தேதி ஏலம் எப்போது தொடங்கும்?

ஏலம் மதியம் 2:30 மணிக்கு தொடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com