\
சொதப்பிய முரளி விஜய் வெளியே… இது சென்னையின் மங்காத்தா..!

சொதப்பிய முரளி விஜய் வெளியே… இது சென்னையின் மங்காத்தா..!

சொதப்பிய முரளி விஜய் வெளியே… இது சென்னையின் மங்காத்தா..!
Published on

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளார். 

அதே நேரத்தில் ஓப்பனர் முரளி விஜய் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மும்பை உடனான முதல் லீக் ஆட்டத்தில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் ராயுடு விளையாடாமல் இருந்தார். தற்போது நூறு சதவிகிதம் ஃபிட்டான அவர் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதே  போல தொடர்ந்து சொதப்பி வந்த ஓப்பனர் முரளி விஜய் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

அவரை அணியிலிருந்து நீக்குமாறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com