பாதியாய் குறைந்த சிஎஸ்கே வருமானம் !

பாதியாய் குறைந்த சிஎஸ்கே வருமானம் !

பாதியாய் குறைந்த சிஎஸ்கே வருமானம் !
Published on

2019 - 2020 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருமானம் அதன் முந்தைய காலக்கட்டத்தைவிட 50 சதவிகிதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கு பின்பு தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி சிஎஸ்கே.

ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் மும்முறை வென்ற அணியும் சிஎஸ்கேதான். 2019 - 2020 ஆம் ஆண்டில் 54 சதவிதம் வருமானம் சிஎஸ்கேவுக்கு குறைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ரூ.50.3 கோடி வருவாயை மட்டுமே சிஎஸ்கே ஈட்டியுள்ளது. மேலும் பிசிசிஐயில் இருந்து சிஎஸ்கேவுக்கு விடுவிக்கப்படும் தொகையான ரூ.294 கோடியிலிருந்து ரூ.240 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com