ஐபிஎல் வரலாற்றில் 9வது விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த சாம் கர்ரன் - தாஹிர்

ஐபிஎல் வரலாற்றில் 9வது விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த சாம் கர்ரன் - தாஹிர்

ஐபிஎல் வரலாற்றில் 9வது விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த சாம் கர்ரன் - தாஹிர்
Published on

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பதாவது விக்கெட்டிற்கு பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்த சாம் கர்ரனும் - இம்ரான் தாஹிரும் அதிக ரன்களை சேர்த்து ஐபிஎல் அரங்கில் வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். 

முப்பது ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சென்னை அணியின் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்வதற்கான மொத்த பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து கொண்ட சாம் கர்ரன் 47 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார். 

டெயில் எண்டர்களோடு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய சாம் காரின் ஒன்பதாவது விக்கெட்டிற்கு இம்ரான் தாஹிரோடு கூட்டு சேர்ந்து ரன்களை விளாசினார்.

இருவரும் 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த பேட்ஸ்மேன்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ஒன்பதாவது விக்கெட்டிற்கு 2018 சீசனில் மும்பைக்கு எதிராக சென்னையின் பிராவோவும், தாஹிரும் 41 ரன்களை சேர்த்திருந்தனர். அதே போல 2013 சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக சென்னையின் தோனியும், அஷ்வினும் 41 ரன்களை சேர்த்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com