சிஎஸ்கே அணியினர் புடைசூழ காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீபக் சாஹர் - வைரல் வீடியோ

சிஎஸ்கே அணியினர் புடைசூழ காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீபக் சாஹர் - வைரல் வீடியோ

சிஎஸ்கே அணியினர் புடைசூழ காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீபக் சாஹர் - வைரல் வீடியோ
Published on
தீபக் சாஹர் மற்றும் அவரது காதலி ஜெயா பரத்வாஜ் இருவரும் ஹோட்டல் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது. இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் இப்போட்டியில் சுவராஸ்யமான சம்பவம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், போட்டியின்போது தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது காதலி ஜெயா பரத்வாஜ்க்கு மோதிரம் அணிவித்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததைத் தொடர்ந்து, தீபக் சாஹர் மற்றும் ஜெயா பரத்வாஜ் இருவரும் ஹோட்டல் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவினை அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 
அந்த வீடியோவில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சக வீரர்கள் தீபக் சாஹரை தூக்கிப்பிடித்து அவரது உடல் முழுக்க கேக் பூசினார்கள். அதோடு அவரின் முகத்தில் ஜுஸ் ஊற்றினர். இதனால் கேக் வெள்ளத்தில் மிதந்த சாகர் அங்கேயே அப்படியே தலையை மூடிக்கொண்டு சிரித்தபடி உட்கார்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com