“எனக்கு விசில் அடிக்க தெரியாது, ஆனால் எல்லோரையும் விசில் அடிக்க வைப்பேன்”-உத்தப்பா

“எனக்கு விசில் அடிக்க தெரியாது, ஆனால் எல்லோரையும் விசில் அடிக்க வைப்பேன்”-உத்தப்பா
“எனக்கு விசில் அடிக்க தெரியாது, ஆனால் எல்லோரையும் விசில் அடிக்க வைப்பேன்”-உத்தப்பா

வரும் ஏப்ரல் - மே வாக்கில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் ராபின் உத்தப்பா. இந்திய கிரிக்கெட் வீரரான உத்தப்பா 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி உள்ள உத்தப்பா 4607 ரன்களை ஐபிஎல் ஆட்டத்தில் குவித்துள்ளார். சென்னை அணி ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஆறாவது அணி. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்ளுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மெசேஜ் கொடுத்துள்ளார் உத்தப்பா. 

“வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க. எனக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கமும், நன்றியும். இது கொஞ்சம் லேட்டுன்னாலும், லேட்டஸ்ட்டா சொல்லியிருக்கேன்னு நினைக்குறேன். நான் தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகளாகிவிட்டது. அவருடன் இணைந்து ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆர்வத்துடன் உள்ளேன். 

ராயுடு, ரெய்னாவுடன் விளையாடுவதும் மகிழ்ச்சி. எனக்கு விசில் போட தெரியாது. ஆனால் உங்க எல்லோரையும் விசில் போட வைப்பேன்” என 1.43 வினாடிகள் ஓடும் வீடியோவில் பேசியுள்ளார் உத்தப்பா. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com