நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா முழுமையாக விலகியிருப்பதாக தகவல்! காயம் காரணமா?

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா முழுமையாக விலகியிருப்பதாக தகவல்! காயம் காரணமா?

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா முழுமையாக விலகியிருப்பதாக தகவல்! காயம் காரணமா?
Published on

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் முடிவை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான சென்னை அணியின் போட்டியில் காயம் காரணமாக ஜடேஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரின் துவக்கத்தில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை அடுத்து, தனது விளையாட்டில் கவனம் செலுத்தப் போவதாக கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தற்போது தொடரில் இருந்தே விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வந்தார் ஜடேஜா. அதேபோல், இதற்கு ஐபிஎல் சீசன்களிலும் அட்டகாசமான பங்களிப்பை சிஎஸ்கே அணிக்கு அவர் செலுத்தி வந்தார். இந்த நிலையில், இந்த சீசன் தொடங்கியதில் இருந்து மோசமான ஃபார்ம் காரணமாக சிரமப்படுகிறார் ஜடேஜா. அதுவும் பல்வேறு கேட்சுகளை கூட களத்தில் கோட்டைவிட்டார். ஜடேஜாவா இது என வியக்கும் அளவிற்கு அது இருந்தது. இந்த நிலையில், அவர் முழுமையாக விலகுவதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com