ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸரை விளாசிய சிஎஸ்கே வீரர்! யாரென்று தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸரை விளாசிய சிஎஸ்கே வீரர்! யாரென்று தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸரை விளாசிய சிஎஸ்கே வீரர்! யாரென்று தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றிலேயே மிக நீளமான சிக்ஸரை ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்தான் விளாசியுள்ளார்! 125 மீட்டர் நீளமான சிக்ஸர்! அவர் யார் எனத் தெரியுமா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு மிக நீண்ட சிக்ஸரை விளாசினார். கிட்டத்தட்ட 117 மீட்டர் நீளத்திற்கு! நடப்பு ஐபிஎல் சீசனின் மிக நீண்ட சிக்ஸராக அந்த சிக்ஸர் சாதனை படைத்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீண்ட சிக்ஸர்களின் டாப் 10 பட்டியலுக்குள்ளும் அடியெடுத்து வைத்தது.

முகமது ஷமி வீசிய பந்தில் லிவிங்ஸ்டன் விளாசிய இந்த சிக்ஸர் ஐபிஎல் வரலாற்றில் விளாசப்பட்ட சிக்ஸர்களின் பட்டியலில் 10வது இடத்தை பிடித்தது. 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் சென்னை வீரரின் சிக்ஸர் இன்னும் முறியடிக்கப்படாத ஒன்றாகவே தொடர்கிறது. அது 2008 ஆம் ஆண்டு சென்னை வீரர் அல்பி மோர்கல் விளாசிய சிக்ஸர். டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் பிரக்யான் ஓஜா வீசிய பந்தை 125 மீட்டருக்கு சிக்ஸராக மாற்றி பிரமிக்க வைத்தார் அல்பி மோர்கல். மேலும் அதிக தூர சிக்ஸர்களில் 5 சிக்ஸர்கள் பெங்களூரூ சின்னச்சாமி மைதானத்தில் அடிக்கப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் டாப் 10 சிக்ஸர்கள்:

1.அல்பி மோர்கல் - 125 மீ - 2008
2.பிரவீன் குமார் - 124 மீ - 2008
3.ஆடம் கில்கிறிஸ்ட் - 122 மீ - 2011
4.ராபின் உத்தப்பா - 120 மீ - 2010
5.கிறிஸ் கெயில் - 119 மீ - 2013
6.யுவராஜ் சிங் - 119 மீ - 2009
7.ராஸ் டெய்லர் - 119 மீ - 2008
8.கவுதம் கம்பீர் - 117 மீ - 2013
9.பென் கட்டிங் - 117 மீ - 2016
10.லியாம் லிவிங்ஸ்டன் - 117 மீ - 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com