\
கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே!

கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே!

கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே!
Published on: 

கர்நாடக மாநில அணியின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப் கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் கிருஷ்ணப்ப கவுதம். ஐபிஎல்லில் மொத்தம் 24 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டை எடுத்துள்ளார். மேலும் 186 ரன்களை எடுத்துள்ளார்.

கிருஷ்ணப்ப கவுதம் அதிரடியாக விளையாட கூடியவர். அவரின் ஸ்டிரைக் ரேட் 169.09. நடப்பு ஐபிஎல்லுக்கு முன்பாக கிருஷ்ணப்ப கவுதமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்தது. இந்நிலையில் அவரை யாரும் எதிர்பாராத நிலையில் ரூ.9.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏற்கனவே மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com