சென்னை அணியில் இருந்து விலகிய வீரர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்

சென்னை அணியில் இருந்து விலகிய வீரர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்

சென்னை அணியில் இருந்து விலகிய வீரர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்
Published on

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் தீபக் சாஹர் விலகியுள்ளதாக, ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளரான தீபக் சாஹர், கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியின்போது காயமடைந்தார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற தீபக் சாஹர், அங்கு சிகிச்சை மற்றும் முறையான வலைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுகிலும் அவருக்கு புதிதாக காயம் ஏற்பட்டது. இதனால், குறைந்தது 4 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு, கடும் போட்டிகளுக்கு இடையே அவர் ஏலம் எடுக்கப்பட்டார். தோனியைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுத்த சென்னை அணி நிர்வாகம், தீபக் சாஹர் களத்துக்கு திரும்புவார் என ஆர்வமாக காத்திருந்தநிலையில், அந்த அணிக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை அணி வீரர் தீபக் சாஹர் இந்த சீசனில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளார் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில், வலுவாக உள்ள குஜராத் அணியை, சென்னை அணி வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com