துபாயில் நடந்த சோதனை.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றது. சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் என 51 நபர்கள் குழுவாக சென்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் துபாயில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அனைவரும் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தனர். பின்னர் பயிற்சிகள் தொடங்கின.
இந்நிலையில் சுழற்சி முறையில் மீண்டும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு உதவி பந்துவீச்சாளர் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முடிவுகளை பொறுத்து பயிற்சிகள் தொடரும் எனப்படுகிறது.