விளையாட்டு
கொரோனா சிகிச்சைக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வரிடம் வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்
கொரோனா சிகிச்சைக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வரிடம் வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.