டுபிளசிஸுக்கு மாற்று வீரரை அடையாளம் கண்டது சிஎஸ்கே - யார் அந்த வீரர் தெரியுமா?

டுபிளசிஸுக்கு மாற்று வீரரை அடையாளம் கண்டது சிஎஸ்கே - யார் அந்த வீரர் தெரியுமா?

டுபிளசிஸுக்கு மாற்று வீரரை அடையாளம் கண்டது சிஎஸ்கே - யார் அந்த வீரர் தெரியுமா?
Published on

நியூசிலாந்து வீரர் டெவின் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது. இந்தாண்டு புதிதாக அறிமுகமான 2 அணிகள் உட்பட 10 அணிகள் இதில் மோத உள்ளன. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று முதல் நாள் நடைபெற்றது. அதேபோல், இரண்டாவது நாளான இன்றும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து வீரர் டெவின் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. சிஎஸ்கேவில் தொடக்க வீரராக விளையாடி வந்த டூபிளசிஸை பெங்களூர் அணி தட்டிச் சென்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கான வீரரை அணி நிர்வாகம் தேடிவந்தது. இந்நிலையில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன இவரை, சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே 3765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 225 ரன்கள் எடுத்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 623 ரன்கள் குவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com