விளையாட்டு
சிக்ஸர் மழை பொழிந்து முதலிடத்துக்கு வருவாரா தோனி !
சிக்ஸர் மழை பொழிந்து முதலிடத்துக்கு வருவாரா தோனி !
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி 4 சிக்ஸர்கள் அடித்தால் இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற இடத்தை பிடிப்பார். தோனி இந்த தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 29 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 32 சிக்ஸர்கள் விளாசிய கே.எல்.ராகுல் முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 31, டிவில்லியர்ஸ் 30 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனியைப் போல் அம்பதி ராயுடுவும் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லிக்கு எதிராக நடைபெற்று வரும் லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியில் தோனி 4 சிக்ஸர்கள் விளாசினால் அவர் முதலிடத்துக்கு வருவார். அணிகளைப் பொருத்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தத் தொடரில் 116 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளது.

