வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ?

வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ?
வெற்றி முனைப்பில் சிஎஸ்கேவின் 'DADDY'S ARMY': அணியின் பலம், பலவீனம் என்ன ?

கடந்தாண்டு ஐபிஎல் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட சென்னை அணி நடப்பாண்டு சீசனில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ளது. தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் பலவீனங்கள் என்னென்ன?

ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அனைத்து சீசன்களிலும் ஃப்ளே ஆஃப், 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி, 3 முறை சாம்பியன், 2 முறை டி-20 சாம்பியன்ஸ் லீக் சாம்பியன். இத்தகைய பெருமைகளுடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைக்கிறது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் படை. ஐபிஎல்லின் ஆரம்ப சீசன் முதலே சென்னை அணியின் பேட்டிங் மற்றும் கீப்பிங்கிற்கு ஆலமரமாக வலம் வருகிறார் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் வாட்சன், நிதானமாக ஆட்டத்தை எடுத்துச் செல்லும் டூ பிளசி, எதிரணியினரை அசரும் நேரத்தில் துவம்சம் செய்யும் அம்பத்தி ராயுடு ஆகியோர் மேல்வரிசை பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கின்றனர். சுரேஷ் ரெய்னா இல்லாத நெருக்கடியை தமிழக வீரர்கள் முரளி விஜய் அல்லது ஜெகதீசன் சரிசெய்வார்கள் என நம்பப்படுகிறது. மத்திய வரிசையில் தல தோனிக்கு பக்க பலமாக இருக்கிறார் கேதர் ஜாதவ். ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, பிராவோ, கரண் சர்மா ஆகியோர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுசேர்க்கவுள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பவர் ப்ளே ஓவர்களில் நிபணரான ஆன தீபக் சாஹரும், கடைசி ஓவர்களில் திறன்பட வீசும் லுங்கி இங்கிடியும் பெரும் பலமாக உள்ளனர். மத்திய ஒவர்களில் எதிரணியினரின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த கைதேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது சென்னை அணி. அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பது கூடுதல் பலம். ஹர்பஜன்சிங் இல்லாத வெற்றிடத்தை பியூஸ் சாவ்லா பூர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சாம் குரணும், ஜோஸ் ஹேசல்வுட்டும் தேசிய அணிக்காக விளையாடிய சமீபத்திய ஒருநாள் தொடரில் அசத்தலான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளது சென்னைக்கு ‌பக்கபலம். ஃபீல்டிங்கில் ஜடேஜா, டூ பிளசி ஆகியோர் பிரமிக்க வைத்தாலும் மூத்த வீரர்கள் கடந்த சில சீசன்களாக சொதப்பி வருவது சிறு பலவீனமே.

இளம்வீரர்களைக் கொண்டு சவால் விடுத்த எதிரணிகளை அனுபவத்தால் அடக்கிய சென்னையின் DADDY'S ARMY, கடந்த இரு சீசன்களைப் போலவே இந்தாண்டும் சிங்க நடையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com