பவுண்டரி லைனில் தரமான சம்பவம் செய்த டுபிளிசிஸ்.. மிரண்டுபோன வார்னர்..!

பவுண்டரி லைனில் தரமான சம்பவம் செய்த டுபிளிசிஸ்.. மிரண்டுபோன வார்னர்..!

பவுண்டரி லைனில் தரமான சம்பவம் செய்த டுபிளிசிஸ்.. மிரண்டுபோன வார்னர்..!

சிஎஸ்கே - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வார்னரின் விக்கெட்டை தனது வழக்கமான பாணியில் கேட்ச் பிடித்து டுபிளிசிஸ் சாய்த்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

அதில் பேர்ஸ்டோ, தீபக் சாஹரின் முதல் ஓவரில் போல்டாகி வெளியேறினார். ஆனால் வார்னர் தொடர்ந்து நிதானமாக ஆடினார். கிட்டதட்ட 10 ஓவர் வரை தனது விக்கெட்டை இழக்காமல் ரன்களை அடித்து வந்தார் வார்னர்.

ஆனால் 11 ஓவரை சிஎஸ்கேவின் சாவ்லா வீச, வார்னர் சிக்ஸ் லைனுக்கு பந்தை தூக்கி அடித்தார். ஆனால் வார்னரின் கெட்ட நேரம் அங்கு பவுண்டரி லைனில் நின்றது டுபிளிசிஸ்

சிக்ஸ் லைனுக்கு வந்த பந்தை எகிறி குதித்து கேட்ச் பிடித்த டுபிளிசிஸ், தடுமாறி சிக்ஸ் லைனில் விழப்போனார். ஆனால் சாதுர்யமாக சிக்ஸ் லைனை தொடும் முன்பு பந்தை மேலே தூக்கிப்போட்டுவிட்டு சிக்ஸ் லைனுக்குள் சென்று நிதானித்து, மீண்டும் எல்லை க்கோட்டிற்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்து வார்னரை அவுட்டாக்கினார்.

இதுப்போன்ற ரிஸ்க்கான கேட்ஸ்களை சாதுர்யமாக பிடிப்பது டுபிளிசிஸ்க்கு இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் சிக்ஸ் லைனில் இரண்டு கேட்ச்களை இதேபாணியில் பிடித்து அசத்தியிருந்தார் டுபிளிசிஸ்.

ஆம், சவுரப் திவாரி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது கேட்ச்களை பவுண்டரி லைனில் எகிறி அட்டகாசமாக பிடித்து அசத்தினார். இன்று அதே பாணியை கடைபிடித்து வார்னரை பெவிலியனுக்கு அனுப்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com