சிஎஸ்கே-வில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?

சிஎஸ்கே-வில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?

சிஎஸ்கே-வில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது ஏன் என்று அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 8 வருடங்களாக ஆடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். அவரை ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால், எடுக்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

இதுபற்றி சிஎஸ்கே அணியில் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, ‘ஏல முறையில் யார் முதலில் வருகிறார்களோ, அவர்களைதான் எடுக்க முடியும். முதலில் வரும் வீரர்களை விட்டுவிட முடியாது. பின்னால் வரும் வீரருக்காக காத்திருந்தால் ஓர் அணியை உருவாக்க முடியாது. அஸ்வினை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஒரு அளவுக்கு மேல் அது முடியாமல் போனது. முரளி விஜய்யை வேறு யாரும் எடுக்காமல் இருந்தால் பிறகு எடுத்துக்கொள்ளலாம் என இருந்தோம். அப்படியே நடந்தது. பிறகுதான் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்தோம். இவர்களுக்கு பிறகுதான் தினேஷ் கார்த்திக் ஏலப்பட்டியலுக்கு வந்தார். அவருக்காகக் காத்திருந்தால் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்திருக்க முடியாது. வாஷிங்கடன் சுந்தர் ஏலப்பட்டியலில் 133-வது வீரராக வந்தார். அவரை நாங்கள் எடுக்க நினைத்தோம். அவருக்காக காத்திருந்தால் வேறு சுழல்பந்துவீச்சாளர்களை எடுத்திருக்க முடியாது. இதுதான் நிலைமை. இதனால் சில உள்ளூர் வீரர்களை சேர்க்க முடியாமல் போய்விட்டது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com