வாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே

வாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே
வாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே

ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல், ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னரும், மனீஷ் பாண்டேவும் அதிரடியாக ரன் குவித்தனர். வார்னர் 57 ரன்களில் அவுட் ஆன நிலையில், மனீஷ் பாண்டே கடைசி வரை அவுட் ஆகாமல் 83 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த சென்னை அணியின் தொடக்க வீரர் டூ பிளசிஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா வாட்சன் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

எனினும், மறுமுனையில் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். குறிப்பாக சந்தீப் சர்மா வீசிய ஓவர்களை வாட்சன் நொறுக்கினார். அத்துடன் 53 பந்துகளை மட்டுமே சந்தித்த வாட்சன் 6 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்கள் குவித்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இவர் 17-வது ஒவரில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி சதத்தை நழுவவிட்டார்.

இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், சென்னை அணி 16 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com