''சிஎஸ்கேவின் இதயத்துடிப்பு ரெய்னா'' - உருக்கமாக பதிவிட்ட சிஎஸ்கே வீரர் வாட்சன்

''சிஎஸ்கேவின் இதயத்துடிப்பு ரெய்னா'' - உருக்கமாக பதிவிட்ட சிஎஸ்கே வீரர் வாட்சன்
''சிஎஸ்கேவின் இதயத்துடிப்பு ரெய்னா'' - உருக்கமாக பதிவிட்ட சிஎஸ்கே வீரர் வாட்சன்

சிஎஸ்கே அணி வீரர் வாட்சன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு ஐபிஎல் குறித்து பேசியுள்ளார்.

செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கிறது. இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவரும் பிசிசிஐ நிர்வாகம் வீரர்கள், ஐபிஎல் ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தது.

இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி ஐபிஎல் மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய முடியுமோ அதை தவறாது செய்ய வேண்டும். ஏனென்றால் இது மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் போட்டி. இது சிறப்பாக செல்ல வேண்டுமென்பதே அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

குறிப்பாக சி.எஸ்.கே. அணி கொரோனாவால் பயிற்சியை தொடங்காமல் உள்ளது. இதற்கிடையே ரெய்னாவும் இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர் வாட்சன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு ஐபிஎல் குறித்து பேசியுள்ளார். மேலும் ஐபிஎல் சிறப்பாக செல்ல என்னால் முடிந்ததை நான் செய்வேன் என தெரிவித்துள்ளார். முடிந்தவரை தடையின்றி செல்ல வேண்டும். இது ஐபிஎல் மற்றும் கிரிக்கெட்டின் ஒரு அற்புதமான சீசன் என தெரிவித்துள்ளார்

மேலும் சுரேஷ் ரெய்னா குறித்து பேசியுள்ள அவர், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நினைத்துக் கொள்கிறேன். உங்களை சிஎஸ்கே நிச்சயம் மிஸ் செய்யும்.நீங்கள் தான் அணியின் இதயத்துடிப்பு. உங்களை பெருமைக்கொள்ள செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com