"என் மீதான எதிர்பார்ப்புகள் என்னை பாதிக்காது"- பி.வி.சிந்து

"என் மீதான எதிர்பார்ப்புகள் என்னை பாதிக்காது"- பி.வி.சிந்து
"என் மீதான எதிர்பார்ப்புகள் என்னை பாதிக்காது"- பி.வி.சிந்து
Published on


தன் மீதான விமா்சனங்களும், எதிர்பார்ப்புகளும் தன்னை பாதிக்காது என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பின், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் சிந்து. இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார், அப்போது " உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது எனது பேட்மிண்டன் பயணத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேறினேன். அதனை நான் எதிர்மறையாக கருதவில்லை. நோ்மறையாகவே சிந்தித்தேன். அனைத்து போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை ஒருவரால் பதிவு செய்ய முடியாது. சில போட்டிகளில் புத்திசாலித்தனமாக விளையாடலாம். சிலவற்றில் தவறிழைக்கலாம்" என்றார்.

மேலும் தொடர்ந்த சிந்து " விளையாட்டில் நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வருகிறேன். நோ்மறையான சிந்தையுடன் பழையபடி வலிமையான வீராங்கனையாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் எனக்கு எதிராக விமா்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. விமா்சனங்களும், எதிர்பார்ப்புகளும் என்னை பாதிக்காது. எனது பிரதான இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே ஆகும். இதற்காக பல்வேறு உத்திகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நிச்சயமாக ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வெல்வேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com