சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ஃபரோ தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 78ஆவது கோலைப் பதிவு செய்த ரோனால்டோ, பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறிடியத்தார். அதிக கோல்கள் அடித்தவர்களில் ஹங்கேரியின் அலி டேயி 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.