“மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சிறந்த வீரர்” - பீலே

“மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சிறந்த வீரர்” - பீலே

“மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சிறந்த வீரர்” - பீலே
Published on

கால்பந்தாட்ட உலகின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவர் பிரேசில் நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே. அவர் இன்றைய கால்பந்தாட்டத்தை ஆட்சி செய்து வரும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவில், ரொனால்டோவே சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார். தான் அப்படி நினைப்பது குறித்தும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

“உலகிலேயே இன்று சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோதான். ஏன் என்றால் அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் நாம் மெஸ்ஸியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர் ஸ்ட்ரைக்கர் இல்லை” என யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 

ரொனால்டோவை புகழ்ந்திருந்தாலும் கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பதையும் தெரிவித்துள்ளார். “இந்த கேள்விக்கு பதில் கொடுப்பது கொஞ்சம் கடினம். நாம் பெரிய பெரிய கால்பந்தாட்ட ஜாம்பவான்களை இதற்கு பதிலாக சொல்லலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இப்போதைக்கு பீலே தான்” என தனது பெயரையே தெரிவித்துள்ளார் அவர். 

அண்மையில் மெஸ்ஸி ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com