ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்! நெகிழ்ச்சியில் கண்கலங்கிய காதலி!

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்! நெகிழ்ச்சியில் கண்கலங்கிய காதலி!

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்! நெகிழ்ச்சியில் கண்கலங்கிய காதலி!
Published on

ரொனால்டோவின் ஆட்டத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவரது காதலி ஜார்ஜியானா, கண் கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இத்தாலியின் டுரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றின் இரண்டாவது லெக் போட்டி நேற்று நடைபெற்றது.  இந்த போட்டியில் ஜூவாண்டிஸ் அணி, அத்லெடிகோ மாட்ரிட் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டி ஜூவாண்டிஸ் அணிக்கு  வாழ்வா சாவா போட்டி என்பதால் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ஆட்டத்தில் அனல் பறந்தது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், ஜூவாண்டிஸ் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசரவைத்தார்.

ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அத்லெடிகோ அணி வீரர்கள் திணறினர். ஹாட்ரிக் கோல் மூலம் தனது அணியை கால் இறுதிக்கு அழைத்துச்சென்றார் ரொனால்டோ. ரொனால்டாவின் ஆட்டத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர். மகிழ்ச்சியின் மிகுதியில் ஆரவாரம் செய்தனர். 

ரசிகர்களின் மகிழ்ச்சியையும், ரொனால்டாவின் ஆட்டத்தையும் பார்த்து நெகிழ்ச்சியடைந்த ரொனால்டோவின் காதலி ஜார்ஜியானா ராட்ரீகஸ் கண்கலங்கி அழத்தொடங்கினார். நெகிழ்ச்சியில் ஜார்ஜியானா கண்கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com