கொஞ்சம் தூங்க விடுங்க பாஸ் ! கெஞ்சிய ரொனால்டோ

கொஞ்சம் தூங்க விடுங்க பாஸ் ! கெஞ்சிய ரொனால்டோ

கொஞ்சம் தூங்க விடுங்க பாஸ் ! கெஞ்சிய ரொனால்டோ
Published on

ரஷ்யாவில் உலக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டியில் போர்ச்சுகலும், ஈரானும் மோதியது. இதில் 1க்கு0 என்ற கணக்கில் போர்ச்சகல் அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது போர்ச்சுகல் வீரர்கள் தங்கியிருந்த சரன்ஸ்கே சிட்டி சென்டர் ஹோட்டலின் வெளியே ஈரான் ரசிகர்கள் கூடினர். ஈரான் ரசிகர்களுக்கு போர்ச்சுகல் வீரர்கள், அங்குதான் தங்கியிருக்கிறார்கள் என்று தெரியும். இதனையடுத்து அவர்கள் ஹோட்டலின் வெளியே கூடி, ஆட்டம் பாட்டம் சத்தம் என அமர்க்களம்படுத்திக் கொண்டு இருந்தனர்.

இப்படி செய்தால் போர்ச்சுகல் வீரர்களால் தூங்க முடியாது. எனவே ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர்கள் சோர்வாக விளையாடி தோற்ப்பார்கள் என்று எண்ணி இவ்வாறு செய்துள்ளனர். போர்ச்சுகல் தோற்றால்தான் ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இரவு 11 மணிக்கு மேல் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை எப்படி தடுப்பது என ஹோட்டல் நடத்துபவர்களுக்கு தெரியவில்லை.

இதை கேள்விப்பட்ட போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனோல்டோ தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக வெளியே கூடியிருந்த ஈரான் ரசிகர்களிடம் கையசைத்தார். பின்பு, சைகையில் தான் தூங்க வேண்டும், தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஈரான் ரசிகர்கள் கலைந்துச் சென்றனர். இதில் ஒரு ஈரான் ரசிகர் சொன்னார் "நான் ரொனால்டோவை காதலிக்கிறேன், போர்ச்சுகலை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் இதை நாங்கள் செய்தோம், ஏனென்றால் ஈரானுக்கு அது முக்கியப் போட்டி" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com