நடுவரை தள்ளிவிட்டதற்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணிக்கு எதிரான சூப்பர் கோப்பை இறுதியாட்டத்தின் போது விதிமுறைகளுக்கு புறம்பாக விளையாடியதாக நடுவரால் சிகப்பு அட்டை காட்டி, ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரொனால்டோ நடுவரை கையால் தள்ளினார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம், அபராதத் தொகையுடன் ஐந்து போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதித்தது. சூப்பர் கோப்பை போட்டியின் முதல் லெக்கில், ரியல் மேட்ரிட் அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.