வாவ்... கவுர்! சாதனை சதத்துக்கு குவிகிறது பாராட்டு!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் சாதனை சதம் அடித்தார். 90 பந்துகளில் சதம் விளாசிய அவர், 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இதில் 20
பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ’ கவுரின் லைஃப்டைம் இன்னிங்ஸ் இது. என்னா அடி. இந்திய அணியின் ஸ்கோரில் 60 சதவிகித ரன்னை கவுரே எடுத்திருக்கிறார். வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
யுவராஜ் சிங், ‘நம்ப முடியாத ஆட்டம் இது. வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். கபில்தேவ், சச்சின், ரவி சாஸ்திரி, மைக்கேல் வாகன், சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா ஆகியோரும் கவுருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இதே போல கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு
சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

