காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி !

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி !

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி !
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்ஜய் நிரூபம்மை சந்தித்து கட்சியில் சேர்ந்துக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சொந்த வாழ்க்கையில் மனைவி ஹசின் ஜகான் ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது. ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் முகநூலில் பதிவிட்டார். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக பாகிஸ்தான் பெண், ஷமிக்கு பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

மனைவியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் நிலைகுலைந்துப்போன ஷமி, சில நாட்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். என் நாட்டுக்கு துரோகம் செய்வதை விட இறந்து விடுவேன் எனக் கூறினார்.இந்நிலையில் ஷமியின் மனைவி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மனைவி அளித்த புகாரின் பேரில், ஷமியிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு, ஷமி விடுவிக்கப்பட்டார்.

ஷமியின் மனைவி ஹசின், தனக்கும் தனது மகளுக்கும் வாழ்வாதாரம் இல்லை என்றும், உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இவர்கள் பிரச்னை நீதிமன்றங்கள் சென்றும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ள ஹசின், தற்போது ஃபத்வா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அம்ரோகா மாவட்ட ஆட்சியரிடம் ஷமி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஹேமந்த் குமார் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைந்ததும், ஷமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் ஷகாஸ்புர் அலி நகரில் உள்ள தனது குடும்பத்தினருடன் முகமது ஷமி வசித்து வருகிறார். இந்திய அணிக்கு விளையாடாத நாட்களில் ஷமிக்கு ஒரு தனி பாதுகாப்பு காவலர் போடப்பட்டிருந்தார். பின்னர், அந்த காவலர் திரும்ப பெறப்பட்டார். இந்நிலையில்தான் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com