காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மீட்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மஹாதேவ் ஜாதவ் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மீட்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ். இவர் டிமென்ஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை புனே நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து  பீதியடைந்த அவர்கள் மஹாதேவ் ஜாதவ் காணமானல் போனது குறித்து லக்னோவில் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் உடனடியாக மஹாதேவ் ஜாதவை தேடத் தொடங்கினர் போலீசார். வீதி வீதியாக, வீடு வீடாக அவரை சல்லடை போட்டு தேடிய நிலையில் சில மணி நேரத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

முந்த்வா பகுதியில் மஹாதேவ் ஜாதவ் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்த்வா காவல் நிலைய அதிகாரி அஜித் லக்டே தெரிவித்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com