ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், 188 ஒரு நாள் போட்டிகளிலும் 28 டெஸ்ட் போட்டிகளி லும் விளையாடியுள்ளார். இவர் ஹராரேவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மனைவி யிடம் கத்தி முனையில் சிலர் கொள்ளையடித் துச் சென்றதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
’’வீட்டுக்கு வெளியே என் மனைவிக்காக காத்திருந்தேன். அப்போது திடீரென்று என் மனைவியின் அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று சுதாரித்து ஓடிச் செல்வதற்குள், ஆயுதம் வைத்திருந்த 4 பேர் அவளிடம் கொள்ளையடித்துவிட்டு சிகப்பு நிற காரில் தப்பிச் சென்றுவிட்டனர். நல்ல வேளையாக அவள் கைப்பையை மட்டும் இழந்தார். இது எச்சரிக்கை. பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள். இருட்டில் செல்லும்போது கவனமாக இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஹராரேவில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி கொள்ளையடித்துச் செல்வது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.