Yuvraj Singh to coach Priyansh Arya after Abhishek Sharma
பிரியான்ஸ் ஆர்யாவிற்கு பயிற்சியளிக்கும் யுவராஜ் சிங்web

அபிஷேக் சர்மாவை தொடர்ந்து பிரியான்ஸ் ஆர்யா.. பயிற்சி கொடுக்கும் யுவராஜ் சிங்!

பஞ்சாப் வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில்லை தொடர்ந்து தற்போது பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவருக்கும் யுவராஜ் சிங் பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளார்.
Published on

உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருந்துவரும் அபிஷேக் சர்மா மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவரும் சுப்மன் கில் இருவரின் ஆரம்ப கால கிரிக்கெட் முன்னேற்றத்தில் பெரிதும் பங்காற்றியவர் யுவராஜ் சிங்.

பஞ்சாபை சேர்ந்த வீரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் மெண்டராக செயல்பட்ட யுவராஜ் சிங், தற்போது அவர்களுடைய முன்னேற்றத்தில் ஒரு அங்கமாக இருந்துவருகிறார். இதை இரண்டு வீரர்களும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.

யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மா
யுவராஜ் சிங் - அபிஷேக் சர்மாweb

இந்நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவருக்கும் பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார் யுவராஜ் சிங்.

Yuvraj Singh to coach Priyansh Arya after Abhishek Sharma
யுவராஜ் சிங் 2.O| 15 வயதில் 1200 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா.. டி20-ன் எதிர்காலமாக மாறிய கதை!

பிரியான்ஸ் ஆர்யாவை தயார்படுத்தும் யுவராஜ்..

2008 ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், பஞ்சாபை சேர்ந்த இளம்வீரர்களுக்கு கிரிக்கெட்டை சரியான பாதையில் அணுக உதவும் ஒரு முதுகெலும்பாக திரைக்குபின்னால் செயல்பட்டுவருகிறார். அவருடைய இந்த முயற்சி இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை தயார்படுத்தியுள்ளது.

Yuvraj Singh to coach Priyansh Arya after Abhishek Sharma
”2011 WC டீமில் யுவராஜ் வேண்டுமென்று இறுதிவரை தோனி போராடினார்” - உண்மையை உடைத்த கேரி கிர்ஸ்டன்!

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக 2025 ஐபிஎல் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் தற்போது யுவராஜ் சிங்கிடம் பயிற்சிபெறுகின்றனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி "OG #YuvrajSingh இடமிருந்து கற்றுக்கொள்வது" என பதிவிட்டுள்ளது.

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 வரை ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா இருவரும் இடம்பெற்றுள்ளனர். பிரப்சிம்ரன் மூன்று போட்டிகளிலும் விளையாடவிருக்கும் நிலையில், பிரியான்ஸ் ஆர்யா முதல் போட்டிக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Yuvraj Singh to coach Priyansh Arya after Abhishek Sharma
பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி பதவி பறிப்பு.. அன்புமணி அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com