yograj singh praises dhoni
தோனி - யோக்ராஜ் சிங்web

”தோனிக்கு எதிராக நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்..” - யுவராஜ் சிங் தந்தை

கிரிக்கெட் களத்தில் நண்பர்கள் என யாரும் கிடையாது என்றும், முதுகில் குத்துபவர்களே இங்கு அதிகம் என்றும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் பேசியுள்ளார்.
Published on

2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை இரண்டையும் இந்தியா வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். தன்னுடைய அதிரடியான பேட்டிங் மற்றும் கைக்கொடுத்தும் பந்துவீச்சு இரண்டாலும் 2012-ம் ஆண்டுவரை இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்திருந்தார் யுவராஜ் சிங்.

ஆனால் அதற்குபிறகு கேன்சர் பாதிப்பால் ஓய்விலிருந்த அவரால், மீண்டும் தன்னுடைய பழைய பார்மிற்கு திரும்பவே முடியவில்லை. இதனால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் யுவராஜ் சிங். 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி அவருடைய நீக்கத்திற்கு பெரிய காரணமாக அமைந்தது.

யுவ்ராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்
யுவ்ராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்

தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 ஒருநாள் உலகக்கோப்பை இரண்டிலிருந்தும் நீக்கப்பட்ட யுவராஜ் சிங், 2017-ம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் பங்கேற்றார், ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது.

யுவராஜ் சிங்கிற்கு ஆதரவளிக்காத மகேந்திர சிங் தோனி மீது தொடர்ந்து அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் குற்றஞ்சாட்டி வருகிறார்.

யாருமே இங்கு நண்பர்கள் கிடையாது..

இர்ஃபான் பதான் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகிவரும் நிலையில், அதுகுறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் தோனியை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் யுவராஜ் சிங் தந்தை, "இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல, கம்பீரும் இதைப் பற்றிப் பேசுவதை நீங்கள் பார்க்கலாம். வீரேந்தர் சேவாக்கும் சமீபத்தில் அதை வெளிப்படையாகச் சொன்னார். ஹர்பஜன் சிங் எப்படி அணியிலிருந்து ஒரு ஈயைப் போல வெளியேற்றப்பட்டார் என்று பேசினார். தோனி ஏன் சகவீரர்களுக்கு எதிராக அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். உண்மையில் எம்.எஸ். தோனி இதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை, ஏனென்றால் பதிலளிக்க விரும்பாதவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கும்” என்று குற்றஞ்சாட்டினார்.

யுவராஜ் சிங் - தோனி
யுவராஜ் சிங் - தோனிweb

தொடர்ந்து பேசியவர், "நான் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், எம்.எஸ். தோனி பற்றிப் பேசுகிறேன். அவர்கள் வீரர்களை முட்டாள்கள் போல நடத்தினார்கள். நமது கிரிக்கெட் வீரர்களும், அணியும் நமது கேப்டன்களால் அழிக்கப்பட்டன" என்றும் விமர்சித்தார்.

மேலும் கோலி யுவராஜ் சிங்கிற்கு உதவவில்லையா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கிரிக்கெட்டில் யாருமே நண்பர்கள் கிடையாது. பணம், பதவி, வெற்றி, புகழ் ஆகிய தேடுதலில் யாரும் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். இந்த இடங்களில் முதுகில் குத்தும் நபர்களே அதிகமாக இருப்பார்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் உங்களை கீழே தள்ள பார்ப்பார்கள். யுவராஜ் சிங்கின் வெற்றியை பார்த்து தோனி உள்ளிட்ட பலருக்கும் பயமாக இருந்தது” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com