\
wpl auction 2027 updates and full players list
model imagechatgpt

WPL 2027 | ரூ.1.10 கோடிக்கு ஏலம் போன ஆஸி. கேப்டன்.. 15 வயதில் ஒப்பந்தமான உமா காஷ்வி!

கொச்சியில் நடைபெற்ற WPL 2027 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூ அதிகபட்சமாக ₹1.10 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
Published on: 

ஐந்து அணிகளில் உள்ள 27 காலியிடங்களை நிரப்ப, கொச்சியில் இன்று நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் 2027 மினி ஏலத்தில் 150 கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் விடப்பட்டனர். இந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் அதிகபட்ச விலைக்கு ஏலம் போயுள்ளார். அவரை ரூ. 1.10 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான விலைக்கு ஏலம் போன ஒரே வீராங்கனை இவர்தான். மேலும் யுபி வாரியர்ஸ் அணி, இந்திய விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா, ஆல்ரவுண்டர் சினே ராணா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ், ஆஷா சோபனா ஆகியோரை தலா ரூ. 30 லட்சத்திற்கும் ஒப்பந்தம் செய்தது.

chattgpt

இந்த ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடாத 6 இளம் இந்திய வீராங்கனைகளை மொத்தம் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 90 லட்சம் கையிருப்புத் தொகையுடன் ஏலத்தில் களமிறங்கிய மும்பை அணி, திஷா கசாத்தை ரூ.10 லட்சத்திற்கு எடுத்தது. தொடர்ந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் லதிகா இனாம்தார், சுழற்பந்து வீச்சாளர் பாரதி ராவல், பேட்டர் சனிகா சால்கே மற்றும் ஆல்ரவுண்டர் அக்சிதா பகத் ஆகியோர் ரூ.10 லட்சம் விலைக்கு வாங்கப்பட்டனர்.

இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரே ரூ. 75 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கர்ஸ்டி கார்டன், உமா காஷ்வி, நஜ்மா கான் ஆகியோர் தலா ரூ.10 லட்சத்திற்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 15 வயதான உமா காஷ்வி, இந்த ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு எடுக்கப்பட்டதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக குறைந்த வயது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஓர்லா ப்ரெண்டர்காஸ்டை ரூ. 30 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும், மதுரையைச் சேர்ந்த ஜி கமாலினியும் ரூ.40 லட்சத்திற்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதே அணியால் சமைரா ராகவ் ரூ.10 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜெஸ் ஜோனாசென்னை ரூ. 40 லட்சத்திற்கும், தேஜல் ஹசப்னிஸை ரூ. 30 லட்சத்திற்கும் க்ளோய் டிரையானை ரூ. 30 லட்சத்திற்கும் பிருந்தா தினேஷை ரூ. 10 லட்சத்திற்கும் எடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com