
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியே காணாத இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதி வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி தரம்சாலாவில் கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் இஷான் கிஷன் தலையில் தேனீ கொட்டியதால் அவர் பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும், அதேபோல் சூர்யகுமார் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்றையப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.