sa vs sl teams
sa vs sl teamstwitter

WorldCup2023: தென்னாப்பிரிக்கா Vs இலங்கை.. ஒரே போட்டி.. பல சாதனைகள்!

உலகக்கோப்பையில், இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் சில சாதனைகளைப் படைத்துள்ளன.

தென்னாப்பிரிக்கா - இலங்கை: ஒரே போட்டி... பல சாதனைகள்!

இந்தியாவில் 50 ஓவர் 13-வது ஆடவர் உலகக்கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற 4-வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 429 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது இலங்கை அணி.

முடிவில் இலங்கை அணி 44.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இன்று (அக். 7) இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது லீக் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இரண்டு அணிகளும் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளன.

அதன்படி, உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ரன்களை (754 ரன்கள்) அடித்து உலக சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 428 ரன்களையும், பின்னர் ஆடிய இலங்கை அணி 326 ரன்களையும் எடுத்தது. இதற்கு முன்பு 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய, வங்கதேசம் இணைந்து 714 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

south aftrica team
south aftrica teamtwitter

தென்னாப்பிரிக்கா அணி செய்த சாதனைகள்

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணி

இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களைக் (417) குவித்த அணியாக இதுவரை வலம் வந்த ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

உலகக்கோப்பையில் அதிகமுறை 400+ ரன்களை எடுத்த அணி!

மேலும், தென்னாப்பிரிக்கா அணி மட்டும்தான் உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை 400-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. இதுவரை அவ்வணி 3 முறை எடுத்துள்ளது. அவ்வணி கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு 408 ரன்களும், தொடர்ந்து அதே ஆண்டில் அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்களும் எடுத்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா: தாயால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 5 வயது சிறுமி.. முகாமில் தங்கியபோது நேர்ந்த கொடூரம்!

உலகக்கோப்பையில் 3 வீரர்கள் சதம்

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த டிகாக் 84 பந்துகளில் 100 ரன்களும், ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 110 பந்துகளில் 108 ரன்களும், மார்க்ரம் 54 பந்துகளில் 106 ரன்களும் எடுத்தனர். இந்த மூவரும் எடுத்த சதங்களால், உலகக்கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக சதங்கள் அடித்த அணியாகவும் தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பையில் குறைந்தபந்தில் சதம்

இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்குமுன்பு, அயர்லாந்து வீரர் ஓபிரையன், கடந்த 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்திருந்திருந்தார்.

இதையும் படிக்க: கென்யா: திடீரென செயலிழந்த கால்கள்.. மர்ம நோய் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான 100 பள்ளிச் சிறுமிகள்!

இலங்கை அணி செய்த சாதனைகள்

அதிக ரன்களை வாரி வழங்கிய மதீஷா பதிரானா

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி, 95 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை வழங்கிய இலங்கை வீரராக பதிரானா மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு, 1987இல் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது அஷாந்தா டி மெல் வழங்கிய 91 ரன்களே சாதனையாக இருந்தது.

பதிரானா
பதிரானாtwitter

பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பேட்டர் குஷால் மெண்டிஸ் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதையும் படிக்க: 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள்... இஸ்ரேலைச் சிதைத்த பாலஸ்தீன ஆயுதக்குழு! போர் பதற்றம் அதிகரிப்பு!

உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இலங்கை வீரர்!

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் குஷால் மெண்டிஸ் முதல் இடம்பித்துள்ளார். அவர், 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்குமுன்பு சனத் ஜெயசூர்யா கடந்த 2007ஆம் ஆண்டு 7 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

குஷால் மெண்டிஸ்
குஷால் மெண்டிஸ்twitter

உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்த மெண்டிஸ்

உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் குஷால் மெண்டிஸ் 3வது இடம்பிடித்துள்ளார். அவர், இன்று 25 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். இதற்கு முன்பு, மேத்யூஸ் 20 பந்துகளில் அடித்து முதல் இடத்திலும் சண்டிமால் 22 பந்துகளில் அடித்தும் 2வது இடத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: WorldCup2023: தோனியால் பட்டை தீட்டப்பட்ட பதிரானா படைத்த மோசமான சாதனை!

உலகக்கோப்பையில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலிலும் இடம்!

அடுத்து, முதல் 10 ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் குஷால் மெண்டிஸ் தலா இருவருடன், 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இன்று 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவு வீரர் கெய்ல் 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரே மீண்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதுபோல் குப்திலும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவர்களுடன் மெண்டிஸும் இணைந்துள்ளார்.

குஷால் மெண்டிஸ்
குஷால் மெண்டிஸ்twitter

உலகக்கோப்பை தொடரில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலிலும் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. அவ்வணி இன்றைய போட்டியில் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி 119/1 என்ற கணக்கிலும், நியூசிலாந்து 116/2 என்ற கணக்கிலும் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளன.

இதையும் படிக்க: WC2023: அதிர்ஷ்டமில்ல.. ஆனால்? உலகக்கோப்பையிலும் ODIயிலும் சம்பவம் செய்யும் தென்னாப்பிரிக்கா அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com