வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றை முறியடிக்க தயார் நிலையில் இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா File Image

இம்மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

Kapil Dev - Ravindra Jadeja
Kapil Dev - Ravindra Jadeja

இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இச்சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனை ஒன்றை முறியடிக்க தயாராகியிருக்கிறார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கபில் தேவ் 43 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் அவரே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் இருக்கிறார். இச்சூழலில் இந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கபில் தேவை பின்னுக்குத் தள்ளி ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். நிச்சயமாக இந்த தொடரில் ஜடேஜா அந்த சாதனையை நிகழ்த்துவார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Ravindra Jadeja
Ravindra Jadeja

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரஹானே, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com