தோனிpt
ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியை மீண்டும் தோனி வழிநடத்துவார் என தகவல் வெளியாகிவுள்ளது.
அண்மையில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இன்று நடக்கும் டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ருதுராஜ் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை எனினும், டெல்லியுடனான போட்டியில் விளையாடுவது குறித்து இன்று முடிவு செய்யப்படுமென சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ருதுராஜ் விளையாடவில்லை என்றால், சென்னை அணியை மீண்டும் தோனி வழிநடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.