WIAAN MULDER | சேவாக் மிஸ்... கோலி,ஹசிம் ஆம்லா சாதனை க்ளோஸ்... யாரு சாமி நீயி..?
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் போட்டியை 328 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது தென் ஆப்பிரிக்கா. முதல் போட்டியில் கேசவ் மகராஜ் கேப்டனாக செயல்பட்டார். இரண்டாம் போட்டியில் வியாம் முல்டர் கேப்டனாக அறிமுகமானார்.
இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. அறிமுக டெஸ்ட் கேப்டன்ஸியில் இருக்கும் எல்லா சாதனைகளையும் தவிடுபொடி ஆக்கிவருகிறார் வியாம் முல்டர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 264 ரன்கள் அடித்திருந்தார் வியாம் முல்டர்.
27 வயதான வியாம் முல்டர் ஓவர்நைட்டில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துவிட்டார்.
இளவயது கேப்டனாக 300
இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் (25 வயது) இந்த வாரம் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக 269 ரன்களில் அவுட் ஆகி இந்தச் சாதனையை தவறவிட்டாலும், வியான் முல்டர் 61 ஆண்டுகால சாதனையை முறியடித்து முச்சதம் அடித்த இளம் வயது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாப் சிம்ஸன் (28 ஆண்டு 171 நாள்) இங்கிலாந்துக்கு எதிராக 311 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு இள வயது கேப்டன் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
27y 138d- வியான் முல்டர் (346 பேட்டிங்), South Africa vs Zimbabwe – Bulawayo 2025
28y 171d – பாப் சிம்சன் (311), Australia vs England – Manchester 1964
29y 61d – ஜெயவர்தனே (374), Sri Lanka vs South Africa – Colombo 2006
30y 276d – மைக்கேல் கிளார்க் (329*), Australia vs India -Sydney 2012
அதிவேக முச்சதம்
இந்திய அதிரடி ஆட்டக்காரர் சேவக்கின் சாதனை நூல் இழையில் மிஸ் ஆகியிருக்கிறது. நம் சென்னை மைதானத்தில் சேவாக் அடித்த முச்சதத்தை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. முல்தானில் முச்சதம் அடித்துவிட்டு, நம் மண்ணிலும் ஒரு முச்சதத்தை அதுவும் அதிவிரைவாக பதிவு செய்தார் சேவாக். 297 பந்துகளில் முச்சதத்தை கடந்திருக்கிறார் வியான் முல்டர்.
278 பந்துகள் – விரேந்திர சேவாக், இந்தியா வெர்சஸ் தென் ஆப்பிரிக்கா – சென்னை 2008
297 பந்துகள் – வியான் முல்டர், தென் ஆப்பிரிக்கா வெர்சஸ் ஜிம்பாப்வே – Bulawayo 2025
310 பந்துகள் – ஹேரி ப்ரூக், இங்கிலாந்து வெர்சஸ் பாகிஸ்தான் – Multan 2024
362 பந்துகள் – மேத்யூ ஹெய்டன், ஆஸ்திரேலியா வெர்சஸ் ஜிம்பாப்வே – Perth 2003
அறிமுக டெஸ்ட் கேப்டன்ஸியில் அதிக ரன்கள்
கேப்டனாக அறிமுகமான போட்டியில் அதிக ரன்கள் விளாசியவர் கோலி தான். அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட சிரமப்படும், ஆஸ்திரேலிய மண்ணில் அசால்ட்டாக இந்தச் சாதனையை செய்தவர் கோலி. 2014ம் ஆண்டு கோலி 256 ரன்கள் அடித்ததே இதுவரை அந்த சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முதல் நாளிலேயே முறியடித்துவிட்டார் முல்டர்.
346* - வியான் முல்டர் (SA) vs ZIM, புலாவாயோ 2025
256 - விராட் கோலி (IND) v AUS, அடிலெய்டு 2014
244 - கிரஹாம் டோலிங்NZ) v IND, கிறிஸ்ட்சர்ச் 1968
232 - கிரக் சேப்பல் (AUS) v WI, பிரிஸ்பேன் 1975
212 - குக் (ENG) v BAN, சிடாகங் 2010
தென்னாப்பிரிக்க வீரராக அதிக ரன்கள்
டெஸ்ட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க வீரர் ஹஸிம் ஆம்லா 311 ரன்கள் எடுத்ததே, அந்த அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அதையும் இன்று முறியடித்திருக்கிறார் வியான் முல்டர்.
மற்ற சாதனைகள்
முதல் நாளிலேயே 250+ ஸ்கோர் பதிவு செய்த ஏழாவது வீரர்.
நான்காவது அதிவேக 250 அடித்த வீரர்