IPL 2025 Captains
IPL 2025 Captainsweb

18வது ஐபிஎல் சீசன்| ருதுராஜ் கெய்க்வாட் முதல் அக்சர் பட்டேல் வரை.. 10 அணிகளின் கேப்டன் யார்?

2025 ஐபிஎல் தொடருக்கான கேப்டன்கள் ஒருவழியாக முடிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகள் கேப்டன்கள் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
Published on

உலக கிரிக்கெட்டில் பணக்கார பிரான்சைஸ் டி20 லீக் தொடராக ஜொலித்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது அதன் 18வது பதிப்பை எட்டியுள்ளது.

IPL 2008
IPL 2008

நடந்து முடிந்துள்ள 17 பதிப்புகளில்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் - தலா 5 முறையும்,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 3 முறையும்,

ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், குஜராத் டைட்டன்ஸ் - தலா ஒரு முறையும்

என கோப்பைகளை வென்று அசத்தியுள்ளன.

IPL 2024
IPL 2024

இந்நிலையில், 18வது சீசனான 2025 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருப்பதாக பிசிசிஐ முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எப்போது தொடங்கி.. எப்போது முடிகிறது?

ஐபிஎல் தொடரின் 18வது சீசனானது வரும் மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கி, மே 25-ம் தேதிவரை நடைபெறவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 அணிகளுக்கு இடையே 74 போட்டிகள், 13 மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன. இதில் 13 டபுள்-ஹெட்டர் போட்டிகளும் அடங்கும்.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கொல்கத்தா ஆடுகளத்தில் சந்திக்கிறது.

மறுநாளில் மார்ச் 23-ம் தேதி மிகப்பெரிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. அதைத்தொடர்ந்து மாரச் 28-ம் தேதி மற்றொரு பெரிய ரைவல்ரி போட்டியாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் சென்னையில் மோதவிருக்கின்றன.

2025 ஐபிஎல் நாக்அவுட் போட்டிகள்:

* குவாலிஃபையர் 1 - மே 20-ம் தேதி - ஹைதராபாத்

* எலிமினேட்டர் - மே 21-ம் தேதி - ஹைதராபாத்

* குவாலிஃபையர் 2 - மே 23-ம் தேதி - கொல்கத்தா

* இறுதிப்போட்டி - மே 25-ம் தேதி - கொல்கத்தா

10 அணிகளின் கேப்டன்கள் யார்?

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட்

2. மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரஜத் பட்டிதார்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்க்யா ரஹானே

5. சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - பேட் கம்மின்ஸ்

ரஜத் பட்டிதார் - RCB Captain
ரஜத் பட்டிதார் - RCB Captain

6. டெல்லி கேபிடல்ஸ் - அக்சர் படேல்

7. குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்

8. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரிஷப் பண்ட்

9. பஞ்சாப் கிங்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர்

10. ராஜஸ்தான் ராய்லஸ் - சஞ்சு சாம்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com