\
சமர் ஜோசப்
சமர் ஜோசப்cricinfo

இலங்கையின் கனவை சிதறடித்த சமர் ஜோசப்.. தொடரும் மோசமான சாதனை!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Published on
Summary

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி ஒருநாள் தொடரை 1-0 என கைப்பற்றிய நிலையில், டி20 தொடரின் முடிவை உறுதிசெய்யும் 3வது போட்டி பரபரப்பாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சமர் ஜோசப் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து இலங்கை பேட்டிங்கை சிதறடித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதற்கடுத்த 2 போட்டிகளும் மழையால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் 1-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது இலங்கை அணி.

wi vs sl
wi vs slweb

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிந்தன. இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

சமர் ஜோசப்
350 சர்வதேச விக்கெட்டுகள்.. பாகிஸ்தானுக்கு எதிராக உலகசாதனை படைத்த தீப்தி சர்மா!

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சமர் ஜோசப் 4 ஓவரில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஜேசன் ஹோல்டர்
ஜேசன் ஹோல்டர்

170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் வெற்றியை பதிவுசெய்து 2-1 என டி20 தொடரை வென்றது. 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சமர் ஜோசப் ஆட்டநாயகன் விருதை வென்றதோடு, தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 தொடரை வென்றதே இல்லை என்ற மோசமான சாதனை இலங்கை அணிக்கு தொடர்கிறது.

சமர் ஜோசப்
’இந்திய மகளிர் அணி டி20 உலகக்கோப்பை வெல்லாது.. அரையிறுதியே கடினம்’ - அஸ்வின்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com