IND vs WI: டெஸ்டா? டி20 யா..? விரட்டி விரட்டி வெளுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்; மிரண்டுபோன வெ.இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 போட்டி போல் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
IND vs WI
IND vs WIFacebook

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

IND vs WI
IND vs WI

இதையடுத்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக பந்து வீச நேரம் வேண்டும். இதனை காரணமாக வைத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷன்,34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 போட்டி போல் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்த ஆட்டம் மூலம் இந்திய அணி விரைவாக 150 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசிய அணி என்ற சாதனையை படைத்தது.

IND vs WI
IND vs WI

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரீத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில், பரீத்வொயிட் 28 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மெக்கன்சி ரன் எடுக்காமல் வெளியேறினார். சந்தர் பால் 24 ரன்களும், பிளாக்வுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 4ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com