\
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்x

இந்தியாவிற்கு மரண அடி.. 250 ரன்களை சேஸ்செய்து வெஸ்ட் இண்டீஸ் சம்பவம்!

இந்தியாவிற்கு எதிராக 250 ரன்கள் சேஸ்செய்து மிரட்டியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Published on: 
Summary

ராஞ்சியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், 250 ரன்களை சேஸ்செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்தது. சாய் ஹோப் மற்றும் ரூதர்போர்ட் இணைந்து 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். சாய் ஹோப் 45 பந்தில் சதமடித்தார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக சதமடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்தார்.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 249 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்கள் விளாசினார்.

இதைத்தொடர்ந்து 250 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எப்படியும் இந்தியா தான் வெல்லப்போகிறது என எதிர்ப்பார்த்த போது, பிரைம் ஃபார்மில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கேப்ட ஷாய் ஹோப் மற்றும் ரூதர்போர்ட் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். 84 ரன்கள் அடித்து ரூதர்போர்ட் அவுட்டாக, கடைசிவரை அவுட்டாகாமல் 45 பந்தில் சதமடித்த சாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி அவர்களுடைய அதிகபட்ச ரன்சேஸிங்கையும், மொத்தமாக 2வது அதிகபட்ச ரன்சேஸிங்கையும் பதிவுசெய்து சாதனை படைத்தது. இந்திய அணியில் பும்ரா இல்லாமல் பந்துவீச்சில் பல பிரச்னைகள் இருப்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. பும்ரா போனதற்கு பிறகு நல்ல பவுலிங் யூனிட்டை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
“இந்திய அணியின் பவுலிங் கிங்காக..” புவனேஷ்வர் குமாரை புகழ்ந்த அஸ்வின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com