\
West Indies Champions won the WCL 2026
West Indies Champions won the WCL 2026x

FINAL| டுவைன் பிராவோ மாஸ்டர் கிளாஸ்.. லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பை வென்றது WI!

லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸை தோற்கடித்து கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி.
Published on: 
Summary

லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 165 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வானார்.

லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் 2026 தொடரானது கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. இதில் இந்தியா சாம்பியன்கள், வங்கதேச சாம்பியன்கள், ஆஸ்திரேலியா சாம்பியன்கள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்கள் என 6 லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று தொடரிலிருந்து வெளியேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் இந்தியா வென்ற நிலையில், அதில் யுவராஜ் சிங் 44 பந்தில் 71 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்தசூழலில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

கோப்பை யாருக்கு என நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே அடித்தது. நட்சத்திர பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ 4 ஓவரில் வெறும் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பேட்டிங்கை பொறுத்தவரையில் மொயின் அலி 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் அடித்தார்.

160 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவரில் 165 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய சிம்மன்ஸ் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உதவியுடன் 53 பந்தில் 77 ரன்கள் விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தது. டுவைன் பிராவோ ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com