பும்ரா பந்துவீச்சில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்.. புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் வாசிம் அக்ரம் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் புகழ்ந்துள்ளனர்.
Wasim Akram - Bumrah
Wasim Akram - Bumrahtwitter

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 229 ரன்கள் மட்டுமே இந்திய எடுத்திருந்ததால், போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் இங்கிலாந்து அணிக்கே இருக்கிறது என்று தோற்றம் இருந்தது. ஆனால் புதிய பந்தில் பும்ரா மற்றும் ஷமி இருவரும் காட்டிய வேகம் மற்றும் ஸ்விங் இரண்டால் இங்கிலாந்து அணி திசையறியாது போனது. அடுத்தடுத்த 2 பந்தில் 2 விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரரான ஜோ ரூட்டை கோல்டன் டக்கில் வெளியேற்றினார். அதற்கு பிறகு வந்த முகமது ஷமி ஒரு நம்பமுடியாத பந்துகள் மூலம் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி இங்கிலாந்து அணியை முழு கட்டுக்குள் கொண்டுவந்தார்.

Bumrah
Bumrah

இந்திய அணியின் தரமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காத இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஷமி மற்றும் பும்ரா இருவரும் கூட்டாக சேர்ந்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 7 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் ஸ்டம்புகளை தகர்த்து எடுத்துவந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.

Shami
Shami

"ஒரு உலகக்கோப்பை போட்டியில் 6 வீரர்கள் போல்டாகி வெளியேறியது 1975 உலகக்கோப்பைக்கு பிறகு இப்போது தான் அரங்கேறியது, அதிக வீரர்கள் போல்டாக்கி வெளியேறிய பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இங்கிலாந்து அணி." இந்நிலையில் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா மற்றும் ஷமி இருவரையும் பாராட்டி தள்ளியுள்ளனர், முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் ஆன வாசிம் அக்ரம் மற்றும் மிஸ்பா உல் ஹக் இருவரும்.

என்னை விட சிறந்த கன்ட்ரோலை வைத்துள்ளார் பும்ரா! - வாசிம் அக்ரம்

இங்கிலாந்து- இந்தியா இடையேயான உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு A ஸ்போர்ட்ஸில் பேசியிருக்கும் வாசிம், “பும்ரா இப்போது உலகின் சிறந்த பந்துவீச்சாளராக உச்சத்தில் இருக்கிறார். அவருடைய பந்துவீச்சின் கட்டுப்பாடு, வேகம், மாறுபாடுகள் என ஒவ்வொன்றும் ஒரு ட்ரீட்டாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு மந்தமான ஆடுகளத்தில் புதிய பந்தின் மூலம் இந்த வகையான இயக்கத்தை பெறுவது என்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது. என்ன வேகம், கேரி, ஃபாலோ-த்ரூ... அவரை ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று பெயரிடுங்கள்" என்று புகழ்ந்து தள்ளினார்.

Bumrah - Wasim
Bumrah - Wasim

மேலும் புதிய பந்தில் என்னைவிட சிறந்த கட்டுப்பாட்டை வைத்துள்ளார் என புகழாரம் சூட்டிய அக்ரம், “பும்ரா விக்கெட்டைச்சுற்றி இருந்து ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கு பந்துவீசும்போது சீமில் அடிக்கிறார். அப்போது பேட்ஸ்மேன் பந்து உள்ளே வருவதாய் நினைத்து உள்ளே வரும் பந்திற்காய் விளையாடுகிறார். ஆனால் பும்ரா அந்த இடத்தில் தான் சிறந்த கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார். பேட்ஸ்மேனை ஏமாற்றி பந்தை வெளியே எடுத்துச்செல்கிறார். இதுதான் பும்ராவை ஆபத்தான ஒரு பந்துவீச்சாளராக மாற்றுகிறது. இந்தவகையான கன்ட்ரோலை நான் கூட வேகப்பந்தில் கொண்டிருக்கவில்லை. நான் புதிய பந்தில் அவுட்ஸ்விங் வீசும் போது என்னால் இந்தளவு சிறப்பாக வீச முடிந்ததில்லை” என புகழாரம் சூட்டியுள்ளார்.

Mark Wood
Mark Wood

ஒரு வேகப்பந்துவீச்சில் எக்காலத்திற்கும் சிறந்த ஜாம்பவான் பந்துவீச்சாளரிடமிருந்து இத்தகைய பாராட்டு வருவது பெரிய விசயம் தான். முன்னதாக பும்ரா தன்னுடைய ஐடலாக வாசிம் அக்ரமை தான் சொல்லியிருந்தார். அந்தவகையில் தன்னுடைய ஐடலிடம் இருந்து சிறந்த வார்த்தையை பெற்றுள்ளார் பும்ரா.

பும்ராவிடம் இருந்து தப்பிக்க ஒரேவழி தான் இருக்கிறது!

மேலும் பும்ராவிடம் இருந்து தப்பிக்க ஒரேவழி தான் இருக்கிறது என பேசியிருக்கும் அக்ரம், ”பும்ராவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அவரது பந்துவீச்சு கூர்முனைகளைத் திருடிவிடுங்கள், வேறு எந்த மாற்றுவழியும் இல்லை” என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். உடன் ஷமியையும் பாராட்டிய வாசிம், “ஷமிக்கு என்ன ஒரு உலகக் கோப்பை இது! ஒவ்வொரு பந்திலும் சீம் எப்படி டெக்கைத் தாக்குகிறது என்பதைப் பாருங்கள்” என புகழ்ந்துள்ளார்.

மேலும் பும்ரா குறித்தும் ஷமி குறித்தும் பேசியிருக்கும் மிஸ்பா, “"புதிய பந்தில் அவர்கள் வீசும் நீளம் தான் பேட்டர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. ஸ்விங்கைத் தவிர பந்துகளின் லைன் மற்றும் லென்த் போன்றவற்றில் பேட்டரை பீட்டன் செய்கிறார்கள்” என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com