\
VVS Laxman as India mens head coach for Asian Games
விவிஎஸ் லக்ஷ்மண்PTI

ஜப்பான் செல்லும் இந்திய அணி.. கழற்றி விடப்பட்ட கவுதம் காம்பீர்.. மீண்டும் இணைந்த விவிஎஸ் லக்ஷ்மண்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

ஜப்பானில் வரும் 19 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இதில், இருபாலருக்கான கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது. இந்திய ஆண்கள் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்குவார் என்றும், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். அமோல் மஜும்தார் இந்திய பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்கிறார்.

விவிஎஸ் லக்ஷ்மண்
விவிஎஸ் லக்ஷ்மண்PTI

இதற்கு முன்னர், சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் லக்ஷ்மண் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது தலைமையிலான இந்திய அணி, தங்கப் பதக்கம் வென்றது. லக்‌ஷ்மணுடன் துணைப் பயிற்சியாளர்களாக சுனில் ஜோஷி, ஹிருஷிகேஷ் கனிட்கர், மற்றும் சுப்‌தீப் கோஷ் ஆகியோரும் ஜப்பான் பயணம் மேற்கொள்வார்கள். சமீபத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றபோது, விவிஎஸ் லக்‌ஷ்மண் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அப்போது இவரது தலைமையிலான அணி, தொடரை வென்றிருந்தது. அதேநேரத்தில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் காம்பீர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளார்.

VVS Laxman as India mens head coach for Asian Games
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி| கழற்றிவிடப்பட்ட காம்பீர்.. மீண்டும் விவிஎஸ் லட்சுமணன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com